×

கோவை மண்டல கிளை மேலாளர் கடிதத்தால் பரபரப்பு பஸ் கண்டக்டர்கள் 10 நாணயத்தை வாங்கக்கூடாது: சமூகவலைதளங்களில் வைரலாகிறது

சென்னை: வசூல் ெதாகையை செலுத்தும்போது நடத்துனர்கள் ரூ.10 நாணயத்தை தவிர்க்க வேண்டும் எனக்கூறி கிளை மேலாளர் எழுதியது போன்ற கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுக்களை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு பயன்பாட்டில் இருக்கும். இவை ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ளன. அந்தவகையில் 10 ரூபாய்  நாணயம் சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் அந்த நாணயம் செல்லாது எனக்கூறியதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பஸ்கள், மளிகை கடைகள் என எங்கும் வாங்குவதற்கு தயக்கம் காட்டினர். பிறகு இப்பிரச்னை ரிசர்வ் வங்கிக்கு சென்றது. இதையடுத்து அந்த வங்கி, ‘சம்மந்தப்பட்ட நாணயம் செல்லும் என்றும், தடையோ, ரத்தோ செய்யவில்லை’ என்று அறிவித்தது. மேலும், ‘10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் குறித்து தங்களிடம் 044-25399222 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பிரச்னை ஓரளவிற்கு குறைந்தது. மேலும் பொதுமக்கள் தயக்கம்  இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது அரசு பஸ்களில் வசூலாகும் ெதாகையை செலுத்தும் நடத்துனர்கள் ரூ.10 நாணயத்தை தவிர்க்க  வேண்டும் எனக்கூறி கிளை மேலாளர் எழுதியது போன்ற கடிதம்  சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்களிடத்தில் மீண்டும் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நடத்துனர்கள் கவனத்திற்கு என துவங்கும் அந்த கடிதத்தில், ‘நடத்துனர்கள் பேருந்துகளில் பணிபுரியும் போது பயணிகள் கொடுக்கும் ரூ.10 நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும் பட்சத்தில் அந்த நாணயத்தை பயணிகளிடம் வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் போது ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடத்துனர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. கடைசியாக கிளை மேலாளர், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக்கழகம், கோவை லிமிட் (ஈரோடு மண்டலம்), திருப்பூர் எனக்கூறி கையொப்பமிடப்பட்டுள்ளது. மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற இக்கடிதம் குறித்து விசாரித்து  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Bus branch conductors ,branch manager ,Coimbatore , letter, Coimbatore ,Branch Manager, 10 coin
× RELATED வெண்டிலேட்டர் வாங்க இந்த பணம் போதும்! சிறுமிகளின் கண்ணீர் கடிதம்!