×

பாலியல் பலாத்கார வழக்கில் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு 14 நாள் நீதிமன்ற காவல்: தேர்தல் புகாரிலும் வழக்குப்பதிவு

லக்னோ: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பகுஜன் சமாஜ் எம்.பி.யை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது தேர்தல் வழக்கிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மக்களவை தேர்தலின்போது, உ.பி.யின் கோசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதுல் ராய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் பற்றிய விவரங்களை பிரமாணப்  பத்திரத்தில் குறிப்பிடுவதுடன், அது குறித்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். ஆனால், அதுல் ராய் தன் மீதான வழக்குகள் பற்றி குறைத்து தெரிவித்துள்ளதாக பாஜ சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தேர்தல் அதிகாரி, பாஜ புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்துள்ளார். அதுல் ராய் மீது 21 வழக்குகள் இருக்கும் நிலையில், தன் மீது 13 வழக்குகள் மட்டும் இருப்பதாக அவர் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.  இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய, தேர்தல் அதிகாரி போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் அதுல் ராய் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே, அதுல் ராய் மீதான பாலியல் பலாத்கார வழக்கு நேற்று முன்தினம் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதுல் ராய் ஆஜரானார். புகார் உறுதியானதை தொடர்ந்து, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்  வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




Tags : Bhagwan Samaj MP , 14-day ,court , Bahujan Samaj, MP
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்