×

தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் 2000 சிறப்பு நிதியை தராதது ஏன்? : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி

சென்னை: “தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் தமிழக அரசு ரூ.2000 சிறப்பு நிதியை வழங்காமல் தாமதிப்பது ஏன்?” என்று  தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக, தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள், ஓட்டல்கள், தனியார் விடுதிகள் போன்றவை மூடக்கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்று என அரசை கேட்டு கொள்கிறேன். அதே போன்று கடந்த பிப்ரவரி 11ம் தேதி தமிழக சட்டப்பேரவைில் முதல்வர் தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்தார்.

மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் போதும் கூட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு இருந்த தமிழக முதல்வர், அமைச்சர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக மக்களின் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்படும் என தொடர்ந்து கூறி வந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 1 மாத காலம் ஆக உள்ளது. ஆனால், ரூ.2000 வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் அரசின் செயலில் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதிமுக அரசுக்கு எதிராக வந்ததன் காரணமாக ரூ.2000 சிறப்பு நிதி வழங்காமல் மக்களை அரசு பழிவாங்குவதாக எண்ண தொடங்கி விட்டனர். ஆகவே, உடனடியாக மக்களின் இன்னலை போக்கும் வகையில் பேரவையில் அறிவித்த ரூ.2000 சிறப்பு நிதியை உடனடியாக வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : election ,Government ,Tamil Nadu ,Muslim League , 2000 special funds,month after ,election?
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...