பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

வானூர்: புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர, விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஜெயமங்கள மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி சன்னதிகளும் அமைந்துள்ளன. கடந்த மே மாதத்தில், வாரி வெங்கடாசலபதிக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரம், கணபதி, பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, மூலவர் ஆஞ்சஅநேயர், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வாரி வெங்கடாசலபதி சன்னதி விமானங்களுக்கும், மூலவர்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு, சுப்ரபாதம், விஸ்வரூபம், 6மணிக்கு, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சேவை, 7 மணிக்கு, புண்யாஹம், கால சந்தி பூஜை, 8 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, ஸமாரோபணம் உள்ளிட்ட எட்டாம் கால பூஜைகள் நடந்தது.

காலை 9 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி, 10 மணிக்கு, ராஜ கோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது . 10.15 மணிக்கு, மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதைதொடர்ந்து, மாலை 6 மணிக்கு, தேவி, பூதேவி சமேத நிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் நாளை 24ம் தேதியன்று துவங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்கிறது.

Tags : Great Kumbabishekam Temple ,Panchavati Anjaneyar Temple , The Panchavati Anjaneyar Temple, the Great Kumbabishekam
× RELATED திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை