×

புன்னைநகர் வன திருப்பதி கோயிலில் வருஷாபிஷேகம்

உடன்குடி: திருச்செந்தூர் அருகே புன்னைநகர் வனத்திருப்பதி  நிவாசபெருமாள் கோயில், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில்  வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வருஷாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 10 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆழ்வார்திருநகரி ரங்கராமானுஜ ஜீயர் ஆசி வழங்கினர்.

முற்பகல் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6மணிக்கு மேல் மேளதாளத்துடன் கருட வாகனத்தில் நிவாச பெருமாள் வீதியுலா நடந்தது. விழாவில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் உத்தரவின் பேரில் கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.

Tags : Punninagar Forest Tirupathi Temple , Punninagar Forest Tirupathi Temple, Varshabhishekam
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...