தக்கலை அருகே பரபரப்பு: தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதிய கார்... மூதாட்டி, இளம்பெண் காயம்

தக்கலை: கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று காரில் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் நாகர்கோவிலில் இருந்து கொல்லத்துக்கு காரில் திரும்பி ெசன்று கொண்டிருந்தனர். தக்கலை அரசு மருத்துவமனை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பஸ் நிறுத்தத்தில் நிற்ற மூதாட்டி மீது உரசியது. மேலும் அருகில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் மீதும் அந்த கார் உரசியது. அதைத்தொடர்ந்து சாலையோரம் போடப்பட்டிருந்த குடிநீர் குழாயில் மோதியது.

இதில் அந்த குடிநீர் குழாய் உடைந்து தூக்கி வீசப்பட்டது. பின்னர் கார் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. அதுபோல கார் உரசியதில் காயமடைந்த மூதாட்டி மற்றும் இளம்பெண் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : car crash , Takalai, car, grandmother, teenager, hurt
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்