×

ஆலங்குடியில் பரபரப்பு: நள்ளிரவு அம்மன் சிலை பிரதிஷ்டை

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் நேற்று நள்ளிரவில், ஒருவர் திடீரென 4 அடி உயரமுள்ள அம்மன் சிலை வைத்து பூஜை செய்துள்ளார். அமமன் சிலைக்கு மாலையிட்டு, படையலிட்டு பூஜை செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் அம்மன் சிலை இருப்பதை பார்த்த அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களும் அம்மன் சிலையை வழிபட்டனர். இந்த சிலையை வைத்து வழிபாடு செய்தது யார் என தெரியவில்லை. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலையை வைத்தது யார், எதற்காக வைத்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Alangudi Parambara ,Goddess Amman , Alangudi, Amman statue, consecration
× RELATED சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்