திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ஒரே ஒரு பைசா திருடுபோயிருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்: அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்ற ஜெகனின் சித்தப்பா பரபரப்பு பேட்டி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பாரெட்டி. இவருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை ஜெகன் ஒதுக்கினார். அதன்படி அவர் நேற்று திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு பதவியேற்றார். பின்னர் சுப்பாரெட்டிக்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்கியபோது இந்து தர்மத்தை காப்பாற்றும் விதமாகவும் திருமலையின் புனிதத்தன்மை, ஆகம விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு எந்த விதத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க முடியுமோ அவ்வாறு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

விரைவில்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்றபின், தலைமை செயல் அலுவலருடன் ஆலோசிக்கப்படும். பின்னர் உலகம் முழுவதும் உள்ள ஏழை, கோடீஸ்வரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமம் என்ற முறையில் அனைத்து பக்தர்களுக்கும் விரைவு தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் கோயிலில் உள்ள நகைகள் திருடப்பட்டதாகவும், சுரங்கம் தோண்டப்பட்டதாகவும் வந்த புகார்களின்பேரில் உரிய விசாரணை நடத்தப்படும். பெருமாளுக்கு சொந்தமான ஒரே ஒரு பைசாவை திருடியிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : penny ,Siddappa ,Tirupathi Ezhumaliyan ,trustee chairman , Tirupati, Jegan's stepfather
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...