×

இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை கடலுக்கு சென்ற மீனவர்கள், இன்று காலை கரை திரும்பினர். குறைந்த அளவு இறால் மீன்களே கிடைத்ததாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 800க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று முழுவதும் மீ ன்பிடித்து விட்டு இன்று காலை அவர்கள் கரை திரும்பினர். சிறிய படகுகளுக்கு அதிக பட்சமாக 70 கிலோவும், பெரிய படகுகளுக்கு 150 கிலோ வரையிலும் இறால் மீன்பாடு இருந்தது. இறால் மீன்கள் குறைவாக கிடைத்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாள் 800 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்ததால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து 2ம் நாள் அதிகபட்சமாக 250 கிலோ இறால் மீன் கிடைத்ததால், விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், இன்று காலை குறைவான அளவு இறால் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இதற்கிடையில், ஜூன் 18ம் தேதி நள்ளிரவு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த டேனியல், செல்வகுமார் உள்பட 4 பேருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அனுமதி டோக்கன் வாங்காமல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இச்சம்பவம் மீனவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அனுமதியின்றி கடலுக்கு சென்ற 4 படகுகளுக்கும் மீன்பிடி அனுமதி டோக்கன் மற்றும் டீசல் டோக்கன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Shrimp fishermen ,Rameswaram ,fishermen , Shrimp fish and Rameshwaram fishermen
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...