பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி லிங்க் ரோடு முக்கியமான சாலை ஆகும். இந்த சாலையில் தனியார் பள்ளிகள், தனியார் வங்கிகள் ஆகியவை உள்ளன. அனைத்து ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், பள்ளி வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்கின் றன. இதனால் இச்சாலையில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும். இச்சாலையில் தனியார் பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் குடி பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்கி சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். இதேபோல இரவு நேரங்களில் குடி பிரியர்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை சாலையில் உடைத்து போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

மேலும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் ஏற்றி வரும் வாகனம் சாலையில் நிறுத்தி மது பாட்டில்களை இறக்குகிறார்கள். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முக்கிய சாலையான லிங்க் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள  டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Task Shop ,Panruti Link Road , Panruti, Task Shop, Removal Request
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு