சிதம்பரத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

சிதம்பரம்: தமிழகத்தில் போதிய மழை இல்லாத நிலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் தொடங்கி உள்ளனர். மழை பெய்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்பதால், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மழை வேண்டி  சிதம்பரததில் உள்ள அனைத்து ஜமாத்களும் இணைந்து சிறப்பு கூட்டுத்தொழுகை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று கூட்டு தொழுகை நடந்தது. இந்த கூட்டுத்தொழுகையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பங்கேற்றனர்.


Tags : Chidambaram , Chidambaram, rain, special prayer
× RELATED செங்கல்பட்டு பகுதியில்...