×

மானாமதுரை அருகே வைகை ஆற்றின் குறுக்கே நீரை தேக்கி வைக்கும் திட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றின் குறுக்கே நிறை தேக்கி வைக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி புதுமையான முறையில் தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை பகுதிகளில் கடும் வறட்சிகள் நிலவுவதால் அங்குள்ள கிணறுகள் வறண்டு விட்டன.

நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி, முத்தனேந்தல் ஆகிய இடங்களில் நீர் உறிஞ்சி தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆற்றில் சுமார் 30 அடி ஆழம் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் தேக்கப்படும். தண்ணீர் தேங்கி நிற்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படும்.

இப்பணியை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக ஆற்றிற்குள் தடுப்பணை கட்டுவது புதுமையான திட்டம் என்றும் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.

Tags : Manamadurai ,Vaigai River , Manamadurai, Vaigai river, water reservoir, project
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்