×

சேலம் சத்திரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்

சேலம்: சேலம் சத்திரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. சேலம் மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மேட்டூர் அணைகளில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது. செவ்வாய்ப் பேட்டை அடுத்த சத்திரம் பகுதியில் இருந்து இந்த தண்ணீரானது நகரின் பலப்பகுதிகளுக்கு பிரித்தனுப்படுகிறது.

இந்நிலையில் சத்திரம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து சாலையில் ஓடி வீணாகி வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Breakwater ,drinking water pipe ,Salem Chatra ,river , Salem, tavern, drinking pipe, break, road, river, water
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...