×

குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு பரவலாக சாரல் மழை பதிவாகியது. குளச்சலில் 12 மி.மீ, சிற்றார்-1ல் 3.4, பேச்சிப்பாறை 4.6, பெருஞ்சாணி 3.8, புத்தன் அணை 3, சிற்றார்-2ல் 3.2 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறையில் அணை நீர்மட்டம் 12.15 அடியாக இருந்தது. பெருஞ்சாணியில் 37.65, சிற்றார்-1ல் 7.54, சிற்றார்-2ல் 7.64, பொய்கையில் 8.20, மாம்பழத்துறையாறு அணையில் 45.12 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்த வண்ணம் இருந்தது.

வெயிலின் தாக்கம் குறைந்ததால் மாவட்டம் முழுவதும் குளுகுளு காலநிலை நிலவியது. குமரி மாவட்ட பகுதிகளில் நேற்று ஒரு சில இடங்களில் சூறைக்காற்று வீசியது.  இதனால் நாகர்கோவில் பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர்  டேங்குகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. இதற்கிடையே தென் தமிழக பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 23ம் தேதி (இன்று) நள்ளிரவு வரை 3.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழ வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மேற்கு மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து பலத்த கடற்காற்று வீசக்கூடும். எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Kumari , Kumari, sarol rain, extension
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...