மின் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உயர் அதிகாரி மீது புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உயர் அதிகாரி கொடுத்த தொந்தரவால் ரத்தஅழுத்த மாத்திரைகளை உட்கொண்டு அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண் உதவி மின் பொறியாளர் ஒருவர் முதலமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த சட்டயம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரியும் சிந்து பைரவி என்பவர் கடந்த 13ம் தேதி அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தப்போது குறை ரத்த அழுத்தத்தை சமன் செய்யும் அதிக அளவில் உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டப்போதிலும் சிந்து பைரவியின் உயிருக்கு 70 மணி நேரம் கெடு விதிக்கப்படவே, கச்சிராப்பாளையம் தகவல் கொடுக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்த அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த பணி தொந்தரவு காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக குற்றம் சாட்டினார். உயர் அதிகாரியான அவர் தன்னை லஞ்சம் வாங்க தூண்டுவதாகவும் கோப்பில் எந்த இடத்தில் கையெழுத்து கேட்டாலும் உடனே போட்டுத் தர வேண்டும் என்றும் வற்புறுத்தி தாகாதா வார்த்தைகளால் பேசி வந்ததாகவும் புகார் கூறினார்.

ஏற்கனவே குறை ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு உயர்அதிகாரி தொடர் தொல்லை கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். உயர் அதிகாரி மீது போலீசில் புகார் அளித்தும் அவர்கள் புகாரை திசை திருப்ப பார்ப்பதாக சிந்து பைரவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது உதவி மின் பொறியாளர் சிந்து பைரவி தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்யும் உயர் அதிகாரியின் கீழ் பணிபுரிய முடியாது என முதலமைச்சர், மின்துறை அமைச்சர், தலைமை பொறியாளர்க்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தன்னை தொந்தரவு செய்யும் அதிகாரி அரசியல் பலமிக்கவராக இருப்பதக்கவும்  அவருடன் பணி செய்தால் தனது உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் மனு அனுப்பியுள்ளார்.  இதனிடையே சிந்து பைரவியின் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க முயன்ற போது அந்த உயர் அதிகாரி விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

Tags : E-office, suicide attempt, high official, complaint
× RELATED மண் தரம் அறியாமல் கொடுத்த விதையால் 500 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி வீண்