×

எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்தியா

ஹிரோஷிமா: எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் இந்தியா - சிலி அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் சிலி வீராங்கனை கரோலினா கார்சியா கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு, குர்ஜித் கவுர் 22வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

அதே உற்சாகத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்தியா, 31வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் மற்றும் 37வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் கோல் போட 3-1 என முன்னிலையை அதிகரித்தது. சிலி அணியின் மேனுவலா உரோஸ் 43வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் இந்திய அணி கேப்டன் ராணி (57வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.


Tags : India ,FIH Series Finals Women's Hockey Final , FIH Series Finals Women's Hockey, India
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...