×

பாதாம் வரியை குறைக்கக்கோரி அமெரிக்க அமைச்சர் வருகை

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா வரியை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, அக்ரூட் கொட்டை, ஆப்பிள், மொச்சை, அவரை போன்ற தானியங்கள் உள்பட 28 பொருள்களுக்கான சுங்க வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால்  வரியை அதிகரிக்க கடந்த வாரம் மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்து இருந்தது. இதனால் அமெரிக்க வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க எம்.பி. ஜோஷ் ஹார்டர், அந்நாட்டின் அமைச்சர் மைக் போம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில், பாதாம் பருப்பு உள்பட 28 பொருட்களுக்கு மோடி அரசு சுங்க வரியை உயர்த்தியுள்ளது. இது அமெரிக்காவின் வர்த்தகத்தை பாதிக்கும். எனவே இது குறித்து அடுத்த வாரம் இந்தியா செல்லும்போது பிரதமர் மோடியுடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கலிபோர்னியா பாதாம் பருப்பை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அமெரிக்க அமைச்சர் போம்பியோ வரும் 25ம் தேதி டெல்லிக்கு வருகிறார். 27ம் தேதி வரையில் இந்தியாவில் இருக்கிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது பற்றி பேச்சு நடத்துகிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் சந்தித்து பேசுகிறார்.

Tags : US ,Minister visits , US Minister visits to cut almond tax
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...