×

விவசாயம் செய்ய 42 நாள் பரோல் வழங்க வேண்டும்: தேரா சச்சா தலைவர் மனு

ரோதக்: பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம், விவசாய பணிக்காக 42 நாட்கள் பரோல் கேட்டுள்ளார். அரியானாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்(51). இவர் மீது 2 பலாத்கார வழக்குகள், பத்திரிக்கையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

பலாத்கார வழக்கில் இவருக்கு கடந்த 2017ல் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள சுனாரியா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பத்திரிக்கைாளர் கொலை வழக்கில் இவருக்கு இந்தாண்டு ஜனவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இவர், விவசாய பணிகளை கவனிக்க 42 நாட்கள் பரோல் கேட்டுள்ளார். இவரது விண்ணப்பத்தை சிர்சா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள சிறை கண்காணிப்பாளர், சிறை விதிமுறைகளை குர்மீத் ஒழுங்காக பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.


Tags : Agriculture, 42 Day, Parole, Dera Sacha Chairman, Petition
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...