×

அமெரிக்காவின் மிரட்டலை சந்திக்க தயார்: ஈரான்

துபாய்: அமெரிக்காவின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவ்சவி அளித்த பேட்டியில், ‘‘ஈரான் எல்லையில் அத்துமீறும் எந்த முடிவையும் அமெரிக்கா எடுக்க முன்வந்தால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக இருப்பதுடன் அதற்கு தக்க பதிலடியும் தருவோம். அமெரிக்காவுடன் போர் நடத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுப்போம்’’ என்றார்.

Tags : US ,Iran , US, intimidation, ready to meet, Iran
× RELATED சொல்லிட்டாங்க…