உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 292 ரன்களை இலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

Tags : World Cup Cricket ,New Zealand ,West Indies , World Cup Cricket, West Indies team, New Zealand team
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...