சென்னையில் மழை

சென்னை: வெயில் கொளுத்தி வந்த நிலையில் சென்னை முழுவதும் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னையில் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. நேற்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது.

மாலை 5 மணிக்கு பிறகு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சரியாக மாலை 6.05 மணியளவில் லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. தரமணி, வேளச்சேரி, கோட்டூர்புரம், திருவான்மியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், கிரீன்ஸ்வேஸ் ரோடு மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் மழை பெய்தது.


Tags : Chennai , Chennai, rain
× RELATED தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி...