×

யு-14 டென்னிஸ் கண்ணன் கோவிந்த் அசத்தல்

சென்னை: அபி ஷோடெக்  14வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவில் கண்ணன் கோவிந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அபி ஷோடெக் ரேங்கிங் யு-14 வீரர், வீராங்கனைகளுக்கான டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 200 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில் கண்ணன் கோவிந்த் - ஆகாஷ் ஜியோ மாட்டம் மோதினர். அதில் கண்ணன்  1-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆகாஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் சிறுவர்களுக்கான இரட்டையர் பிரிவில் அனிகேத்/ ஜெய்ஷ்ணு - கிரிஷ்/ ஹயகிரீவா ஜோடிகள் மோதின. அதில்  அனிககேத்/ஜெய்ஷ்ணு இணை 6-3, 6-2  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.Tags : U-14 ,Dennis Kannan Govind Azhil , U-14 Tennis, Kannan Govind
× RELATED ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூடுகிறது?