×

உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை: உபரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கு பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருந்தால், அந்த பள்ளிகளுக்கு கூடுதலாக தலா ஒரு பணியிடம் வழங்க வேண்டும்.

அவ்வாறு அனைத்து பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட பின், ஒட்டுமொத்த மாவட்டத்தின் காலி பணியிடம் மற்றும் தேவை சேர்த்து, மாவட்டத்திலுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ, கூடுதலாகவோ இருந்தாலோ வேறு எந்த பள்ளிக்கும் needed கலம் பூர்த்தி செய்யக்கூடாது. needed கலம் பூர்த்தி செய்வதை முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டும்.

Tags : Elementary Education , Director of Survey Teaching, Consultation, List, Elementary Education
× RELATED 3ம் பருவத்தேர்வு வினாத்தாள்கள் வழங்க...