எஸ்டிபிஐ கட்சி சார்பில் முப்பெரும் விழா

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளருக்கு விருதுகள் வழங்குதல் என முப்பெரும் விழா சென்னையில் நடந்தது.   விழாவுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்  அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது,  மாவட்ட தலைவர்கள் முகமது ஹூசேன், முகமது சலீம், முகம்மது  தமீம் அன்சாரி,  தமிமுன் அன்சாரி, செய்யது அகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, எஸ்டிபிஐகட்சி தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  தி.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்களுக்காக சேவையாற்றிய 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.Tags : SDPI ,party , SDPI party
× RELATED குறைதீர்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி...