வறட்சி, வரத்து குறைவு, தண்ணீர் பிரச்னை எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: கிலோ பருப்பு 10, தேங்காய் எண்ணெய் 40, புளி 30, அரிசி 2 அதிகரிப்பு

சென்னை: வறட்சி, வரத்து குறைவு, தண்ணீர் பிரச்னை எதிரொலியாக அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருப்பு 10, தேங்காய் எண்ணெய் 40, புளி 30, அரிசி 2 என கிலோவுக்கு அதிகரித்துள்ளது.   இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வறட்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்துவரம் பருப்பு(ஒரு கிலோ) 85லிருந்து ₹95 ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு(2ம் ரகம்) 75லிருந்து 85, உளுந்தம் பருப்பு 75லிருந்து 85, பாசிப்பருப்பு 80லிருந்து 90, பாசிப்பருப்பு(2ம் ரகம்) 75லிருந்து 85, கடலைப்பருப்பு 60லிருந்து 70 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, கிலோவுக்கு 10 வரையும், மூட்டைக்கு 1000 வரையும் விலை அதிகரித்துள்ளது.

இதே போல பாமாயில் 58லிருந்து 62, சன்பிளவர் ஆயில்(முதல் ரகம்) 88லிருந்து 92, சன்பிளவர் ஆயில்(2ம் ரகம்) 78லிருந்து 82, தேங்காய் எண்ணெய் 220லிருந்து 260, அக்மார்க் நல்லெண்ணெய் 270லிருந்து 300, காங்கேயம், ஈரோடு அக்மார்க் நல்லெண்ணெய் 220லிருந்து 250 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. புளி விலை 100 லிருந்து 130, பூண்டு 80லிருந்து 120, பூண்டு(2ம் ரகம்) 40லிருந்து 80, மலைப்பூண்டு 120லிருந்து 160, குண்டு மிளகாய் 100லிருந்து 130, நீட்டு மிளகாய் 100லிருந்து 120, கொத்தமல்லி 90லிருந்து 120, உடைத்த கடலை 80லிருந்து 90, பச்சை வேர்க்கடலை 100லிருந்து 120, மிளகு 500லிருந்து 550, மிளகு(2ம் ரகம்) 400லிருந்து 450 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

மேலும் அரிசி விலையும் உயர தொடங்கியுள்ளது. ‘’ஏடிடி 39’’ ரக அரிசி கிலோ 30லிருந்து 32, ‘’கோ 51’’ ரக அரிசி 32லிருந்து 34, டீலக்ஸ் பொன்னி 34லிருந்து 36, அதிசய பொன்னி 36லிருந்து 38, பிபிடி(முதல் ரகம்) 46லிருந்து 48, பிபிடி(2ம் ரகம்) 40லிருந்து 42, இட்லி அரிசி 34லிருந்து 36, இட்லி அரிசி(2ம் ரகம்) 29லிருந்து 32, சோனா(முதல் ரகம்) 52லிருந்து 54, சோனா(2ம் ரகம்) 46லிருந்து 48, கர்நாடகா அரிசி 44லிருந்து 46, ஆந்திரா அரிசி 42லிருந்து 44. ஆந்திரா அரிசி(2ம் ரகம்) 40லிருந்து 42, பொன்னி பச்சரிசி(புதியது) 42லிருந்து 44, பொன்னி பச்சரிசி(பழையது) 48லிருந்து 50, மாவு பச்சரிசி 26லிருந்து 28 ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.ெசாரூபன் தெரிவித்துள்ளார். ‘‘வறட்சி, வரத்து குறைவு, தண்ணீர் பிரச்சனை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றும் அவர் கூறினார்.Tags : Drought , Drought, shortage, water problem, 10 kg, coconut oil 40, tamarind 30, rice 2 increase
× RELATED கடும் வறட்சியால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்றது ஆஸ்திரேலியா