திருமணமான மறுநாளே புதுப்பெண் மர்ம மரணம்

சென்னை: தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் மலர் (28). இவருக்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (31) என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் தி.நகரில் உள்ள வீட்டில் குடியேறினர். நேற்று முன்தினம் மலர் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த மாம்பலம் போலீசார், மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மலர் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mystery death ,wedding , Marriage, Reunion, Newborn, Death
× RELATED இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன்...