பிரபல ஓட்டலில் தீ

துரைப்பாக்கம்: ராஜீவ்காந்தி சாலை ஒக்கியம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஐ.டி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துரைப்பாக்கம், சிறுசேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. உடனே தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த பெட்ரோல் பங்குக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை