×

தண்ணீர் பற்றாக்குறையை போக்க வருண யாகம் பலன் தரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்

கோவை:  தமிழகத்தில், கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மழை வேண்டி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது மாவட்டங்களில் உள்ள பிரதான கோயில்களில் வருண யாகம் நடத்தினார்கள். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மழை பெய்ய வேண்டி 40 வகையான தானியங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடந்தது.

இதன்பிறகு, நிருபர்களை அமைச்சர் வேலுமணி சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவர்  கூறியதாவது: மழை இல்லாத சூழலில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட கோயில்களிலும் மழை வேண்டி வருண யாகம் நடத்தியுள்ளோம். இந்த யாகம் நிச்சயம் பலன் தரும்.

ஜோலார்பேட்டை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படாத வகையில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஜோலார்பேட்டையில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதாக அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அங்கிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

Tags : SB Velumani , Water shortage, Varuna Yagam, Minister SB Velumani
× RELATED ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா...