குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து காலி குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையின் பல இடங்களில் நேற்று நடந்தது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று நடந்தது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதில், வடசென்னை வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், சுந்தர்ராஜன், பகுதி துணை செயலாளர் ஆதிராஜா, பகுதி தலைவர் அனீபா, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரூபசங்கர் மற்றும்  முன்னாள் பகுதி செயலாளர் ஏ.டி,மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* பெரம்பூர் பகுதி திமுக சார்பில், பெரம்பூர் 13வது குறுக்கு தெருவில் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர், மாநகராட்சி பகுதி பொறியாளர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக மனு கொடுத்தனர்.

* சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வது வார்டில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பரசன், ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* சென்னை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே நடைபெற்றது. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மதிவாணன், துக்காராம், பரந்தாமன், புழல் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு பகுதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது. கே.பி.பி.சாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி, உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

* வேளச்சேரி மேற்கு பகுதி 178வது வட்ட திமுக சார்பில் வேளச்சேரி, ஜெகநாதபுரத்தில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் எம்.தாமோதரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் அரிமா சு.சேகர் முன்னிலை வகித்தார். இதில், 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

* ஆலந்தூர் 164வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம், வட்ட செயலாளர்  ஏசுதாஸ்  தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி உலகநாதன், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* ஆலந்தூர் 161வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம், வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பகுதி துணை செயலாளர் பூவராகவன், உதயகுமார், காங்கிரஸ் சார்பில் நேரு ரோஜா, தனசேகரன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜேந்திரன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத...