×

தமிழகத்தில் முதல்முறை தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் செக்யூரிட்டிகளாக திருநங்கைகள் நியமனம்

தஞ்சை: தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 8 திருநங்கைகளை தமிழக அரசு பணியில் அமர்த்தியுள்ளது.தஞ்சை மாநகரின் மைய பகுதியில் ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சுகாதாரத்துறை சார்பில் சீமாங்க் திட்டத்தின்கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் கண், சிகிச்சைக்கான பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரசவத்துக்காக பெண்கள், மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இங்கு செக்யூரிட்டி என அழைக்கப்படும் காவலாளி பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தமிழகத்திலேயே முதன்முறையாக 8 திருநங்கைகளை பணிக்கு அமர்த்தியுள்ளது தமிழக சுகாதாரத்துறை. இதற்கான பணி ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதையடுத்து பணி ஆணைகளை பெற்ற தஞ்சையை சேர்ந்த ராகினி, சத்யா, மயில், தர்ஷினி, ராஜேந்திரன், பாலமுரளி, முருகானந்தம், மணிவண்ணன் ஆகிய 8 திருநங்கைகள் பணியில் சேர்ந்
துள்ளனர்.



Tags : government hospital ,Thanjavur , Tanzanian Government Hospital, Security, Transgender, Appointment
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்