மழைவேண்டி அதிமுக யாகம் பசுமாடு மிரண்டு திமிறியதால் அமைச்சர் துரைக்கண்ணு ஓட்டம்: முட்டி தள்ளியதில் தொண்டர் படுகாயம்

கும்பகோணம்: மழை வேண்டி இன்று அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயிலில் இன்று காலை யாகம் நடந்தது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அதிமுக  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.யாகம் நடந்து கொண்டிருந்த நிலையில், கொடிமரம் அருகே ஒரு பசுவும், கன்றுவும் கொண்டுவரப்பட்டு கோ பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோயிலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  திரண்டிருந்தனர். கூட்டத்தை பார்த்ததும் அந்த பசு மிரண்டது.அமைச்சர் துரைக்கணணு பசுவை தொட்டு வணங்கி கோபூஜை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அவர் பசுவை நோக்கி சென்றபோது அவரை தொடர்ந்து அதிமுக தொண்டர்களும்  சென்றர்.

இதைப்பார்த்த பசு மிரண்டு ஓட்டம் பிடித்தது. முட்ட வருவது போல் ஓடிவந்த பசுவைப் பார்த்து மிரண்டு அமைச்சர் துரைகண்ணுவும் அலறியடித்து ஓடினார். அந்த பசுவை கொண்டு வந்தவர் கயிற்றை பிடித்தபடி பின்தொடரந்து ஓடினார். ஆனால் பசு கயிற்றை உருவிக்கொண்டு ஓடியது. அந்த பசுவை பிடிக்க முயன்ற அதிமுக தொண்டர் திருவிடைமருதூர் விக்னேஷ் என்பவரை பசு முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை கும்பகோணம் அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து யாகம் மட்டும் நடந்தது. அமைச்சர் பதற்றத்தடன் அதில் பங்கேற்றார்.Tags : Minister of Health , Rain, Anime, Yakam, Green, Minster, Flow, Volunteer
× RELATED கிங்ஸ் இருக்கட்டும்; முதலில் எய்ம்ஸ்...