உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சௌதம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராத் கோலி 67, கேதார் ஜாதவ் 52, கேஎல் ராகுல் 30, விஜய் சங்கர் 29, தோனி 28 எடுத்தனர். 225 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Tags : India ,Afghanistan , World Cup, Cricket
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...