×

அக்.27 தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு தேதியை அறிவித்தது ரயில்வே

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதியை ரயில்வே அறிவித்துள்ளது. சொந்த ஊரிலிருந்து தொழில், படிப்பு,வேலை போன்ற காரணங்களுக்காக நகர்புறங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகை  ,முக்கிய விசேஷங்களுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்வதற்காக ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்துகொள்ளும் வசதி பெரும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில  ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர்  மாத 17 லிருந்து நவம்பர் மாத 15-ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். தலைத்  தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது  அக்டோபர் மாதம் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை 29-ம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 27-ம் தேதி ரயிலில் பயணம் செய்யவுள்ளவர்கள் ஜூன்  29-ம் தேதியும், அக்டோபர் 26-ம் தேதி பயணம் செய்யவுள்ளவர்கள் ஜூன் 30-ம் தேதியும், அக்டோபர் 25-ம் தேதி பயணம் செய்யவுள்ளவர்கள் ஜூலை 9-ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் காலை 8  மணிக்கு டிக்கெட் முன் பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Railways , Diwali Festival, Train Ticket Booking, Railways
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...