×

ஏ, பி பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்க தாமதம்; பட்ஜெட்க்கு நிதி ஒதுக்கிய பின் பார்போம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்க தாமதமாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்க தாமதமாகும் என்றும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டிற்கு நிதி ஒதுக்கிய பிறகு ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாத சம்பளம் சி பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏ பிரிவில் 1 லட்சம் ஊழியர்களும், பி பிரிவில் 3 லட்சம் ஊழியர்களும் மத்திய அரசில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். ஆனால், சில நேரங்களில் இது 10-12 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்நிலையில், ஏ மற்றும் பி ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்க தாமதமாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றுவதற்கு மானியங்களை குறைக்க வேண்டுமென அரசு கூறுகிறது. மானிய சுமையை குறைப்பதற்காக, ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு தினமும் விளம்பரப்படுத்தி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மூத்த குடிமக்களின் ரயில் டிக்கெட் மானியத்தை விட்டுத் தருமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Tags : government announcement ,Central , A and B Division Officers, June Salaries, Budget, Federal Government
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...