×

யாகம் நடத்தினால் மழை வரும் என்பது ஒரு நம்பிக்கையே... சிறப்பு யாகம் செய்த பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் மழை பெய்ய இறைவனை வேண்டி யாகம் நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தமிழர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 100 பேருக்கு ஆக்சிஜனை தரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாகம் நடத்தினால் மழை வரும் என்பது ஒரு நம்பிக்கையே என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்ததால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடிவதாக தெரிவித்த அவர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அதனை கட்டாயப்படுத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்று தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்றும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிப்பதாகவும், நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.


Tags : Minister Jayakumar , Water, water, rain, special yam
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...