திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோவிலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கால்நடைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளை நிலங்கள் அழிந்து பாலைவனமாக மாறும் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Tirupathi pondi , Thiruppuram Pondi, Hydrocarbon, Farmers, Demonstration
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்