×

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்

சென்னை: 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலை கழகம் அறிவித்தது. www.annauniv.edu  என்ற இணையதளத்தில் கல்லூரிகளின் முழு விவரம் மற்றும் அதன் மீதான பல்கலை கழகத்தின் நடவடிக்கைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் சரிபார்த்துக்கொள்ள அண்ணா பல்கலை கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 539 பொறியியல் கல்லூாிகள் உள்ளன. இதில் பி.இ, பி.டெக் படிப்புகளில் ஏறதாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு மே 2ம் தேதி தொடங்கியது. 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 போ் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனா். இவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது.


Tags : Anna University ,engineering colleges ,Tamil Nadu , Tamilnadu, Engineering colleges, Non-standard engineering colleges, Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...