×

குற்றங்களால் உருவாகும் 20 வார கருவை கலைக்க நீதிமன்றங்களை நாட வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை:  சென்னையை சேர்ந்த பெண்ணை மிரட்டி நவீத் அகமத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் கருவுற்றதை அடுத்து, பெண்ணின் தாயார் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.  அதன் அடிப்படையில் நவீத் அகமது மீது பாலியல் கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் 8 வார கருவை கலைக்க போலீசாரிடம் பெண்ணின் தாய் அனுமதி கேட்டார். போலீசார் அனுமதி மறுக்கவே, பெண்ணின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்த சென்னை கஸ்தூரிபா தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரால்தான் கருக்கலைப்பை செய்ய முடியும் என்று கீழ்ப்பாக்கம் போலீசார் கடிதம் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடும்போது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். கருகலைப்பு தொடர்பான மத்திய அரசு சட்டத்தின்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர்கள் சட்டம் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

இருபது வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க மருத்துவ குழுவே, நீதிமன்றத்தை நாட நிர்ப்பந்திக்காமல் சட்டத்தின் அடிப்படையில் கருகலைப்பு செய்யலாம். அதேநேரம், 20 வாரங்களுக்கு மேல் உள்ள கருவை கலைக்க மட்டுமே உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் போலீசாருக்கும் உரிய சட்ட நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு தேவை. பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் கருகலைப்பு தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப  வேண்டும்” என்று உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : courts ,High Court , Crimes, nucleus, High Court
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...