×

வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சவாலாக உள்ளது கஷ்டப்பட்டாவது கடனை அடைத்து கல்லூரியை மீட்டு எடுப்போம்: பிரேமலதா பேட்டி

சென்னை: கல்லூரியில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சவாலாக உள்ளது. எப்படியாவது கஷ்டப்பட்டாவது கடனை அடைத்து கல்லூரியை மீட்டு எடுப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கல்லூரி மற்றும் முக்கிய சொத்துகளை வங்கி ஏலம் விடப்போவதாக அறிவிப்பு செய்ததையடுத்து நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு சினிமாவில் நடித்தார் இப்போது நடிக்க வில்லை. அதைப் போன்று எங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்த திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. எங்களுடைய மகன்களில், ஒருவர் இப்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளார். இன்னொருவர் இப்போது தான் தொழில் தொடங்கியுள்ளார்.

அதனால் எங்களுக்கு வேறுவழியில் வருமானம் இல்லை. ஆனால் உறுதியாக எப்படியாவது கஷ்டப்பட்டாவது கடனை அடைத்து கல்லூரியை மீட்டு எடுப்போம்.  அது மட்டுமல்ல வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சவலாக உள்ளது. எப்படி சினிமா உலகம் நலிந்து போய் உள்ளதோ முதல் நாள் வெளியாகும் படங்கள் மாபெரும் வெற்றிப்படம் என்று விளம்பரம் தான் கொடுக்கின்றனர்.  எல்லா படமும் பிளாப்பு தான் இதை நிலைமை தான் பொறியியல் கல்லூரிகள், நிறுவனங்கள் நடத்துபவர்களின் நிலைமை உள்ளது. நாங்கள் கடன் வாங்கியது இருக்கட்டும் அதை திருப்பி செலுத்த நேரம் கேட்டோம் அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை இன்னும் அடுத்த ஜூலை 26ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் இந்த பிரச்சனை நல்ல முடிவுக்கு ெகாண்டு வருவோம். விஜயகாந்த் ஆண்டாள் அழகர் கல்லூரியை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறோம். வேறு பணத்தை வைத்து தான் கல்லூரியை நடத்திவருகிறோம்.

கல்லூரியில் இருந்து வரும் வருமானத்தை வைத்து கல்லூரியை நடத்த முடியாத நிலையில் தான் உள்ளது. எப்படி சேவை மனப்பான்மையுடன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதோ அது தொடரும். வங்கியில் இருந்து சொன்னார்கள் அவர்கள் சொல்லும் போது எங்களால் முடிந்த பணத்ைத செலுத்திக் கொண்டு தான் இருந்தோம். 2 மாத்திற்குள் திருப்பி செலுத்துவதாக கூறினோம் அதற்குள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் பரவயில்லை. 40 வருடத்திற்கு முன்வாங்கிய சொத்துகள் நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு கடவுள் சோதனை கொடுப்பார். ஆனால் கைவிட மாட்டார். வங்கி நிர்வாகிகள் அவர்கள் கடமையை செய்து இருக்கிறார்கள். சட்டப்படி எப்படி செய்ய வேண்டுமோ செய்து மீண்டு வருவோம். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : College, Premalatha
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...