×

பிஇ, பிடெக் படிப்பில் சேர தகுதிபெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: பிஇ, பிடெக் படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எந்த கல்லூரியில் எந்த பாடப் பிரிவில் எத்தனை மாணவர்கள் சேர்க்க (intake) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் பாட வாரியாக எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ளும். அதற்கேற்ற வசதிகள், ஆசிரியர்கள் ஆகியவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அறிக்கை கொடுப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 537 கல்லூரிகளில் 92 பொறியியல் கல்லூரிகளில் 300 பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கையை குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதுபோன்ற கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் தற்போது 557 கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் கடந்த ஆண்டில் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்ட ஆண்டு, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 2019-20ல்  மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள்  எண்ணிக்கை ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர். இந்த விவரங்கள் வேண்டுவோர் www.annauniv.edu/cai/options.php என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.



Tags : Colleges , PE, BTech courses, colleges
× RELATED இலவச கண் சிகிச்சை முகாம்