×

பிரிட்டிஷ் ஹெரால்டு தேர்வு உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: டிரம்ப், ஜின்பிங் 3, 4வது இடம்

புதுடெல்லி: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர்  நரேந்திர மோடியை, ‘பிரிட்டீஷ் ஹெரால்டு’ பத்திரிகை வாசகர்கள் தேர்வு செய்துள்ளனர்.இங்கிலாந்தில் வெளியாகும் புகழ் பெற்ற ‘பிரிட்டிஷ் ஹெரால்டு’ பத்திரிகை,  2019ம் ஆண்டின் உலகின் மிக வாய்ந்த தலைவர் யார் என்பது குறித்து வாசகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் பிரபலமான 25 தலைவர்கள், பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடியை வாசகர்கள் தேர்வு செயதுள்ளனர். கருத்து கணிப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட ஒட்டெடுப்பில் மோடிக்கு 30.9 சதவீத ஓட்டுகள் கிடைத்து, முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று 2வது இடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீத ஓட்டுகளை பெற்று 3வது இடத்தையும், சீன அதிபர் ஜி ஜின்பிங் 18.1 சதவீத ஒட்டுகளுடன் 4வது இடத்தையும் பெற்றுள்ளனர். சக்திமிக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியின் படத்தை அடுத்த மாதம் 15ம் தேதி வெளியாகும் தனது பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் வெளியிட்டு பிரிட்டிஷ் ஹெரால்டு கவுரபடுத்த உள்ளது.



Tags : Modi: World's Most Powerful Leader , British Herald Examination, Prime Minister Modi, Trump, Jinping
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...