×

மலிவு விலை மருந்து விற்பனை கண்காணிப்பு

புதுடெல்லி: மலிவு விலை மருந்து விற்பனையை கண்காணிக்க அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மாண்டவியா கூறியதாவது: ஏழைகளுக்கு தரமான மருந்துகளை குறைந்தவிலையில் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஜன் அவுஷதி மருந்துக்கடைகளில் தற்போது 700 வகை மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மருந்து கடைகளுக்கு தினமும் 20 லோடு மருந்துகள் சப்ளை செய்யப்படுகிறது. கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு என உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட வர்த்தக குறியீடு காரணமாக 526 மருந்துகள் சந்தைவிலையை விட 90 சதவீதத்துக்கும் குறைவான விலையில் இந்த கடைகளில் கிடைக்கின்றன. இந்த மருந்துகளை அதிகவிலைக்கு யாரும் விற்கிறார்களா என்பதை கண்காணிக்க தேசிய மருத்துவ விற்பனை அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Affordable prices, drug sales
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...