×

மொத்தமா கைமாத்திடலாம் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு புது உத்தி

புதுடெல்லி: ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க மத்திய நிதியமைச்சகம் புதிய உத்திகளை பரிந்துரை செய்துள்ளது.  கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா நிறுவனம் நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவன பங்குகளை விற்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை எனவே புதிய உத்திகளை மத்திய அமைச்சர்கள் குழுவிடம் (ஏஐஎஸ்ஏஎம்) நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திடம் தனக்கு உள்ள பங்குகள் அனைத்தையும் (100 சதவீதம்) அல்லது 76 சதவீதத்தை விற்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கவும் நிர்வாக மேலாண்மை கட்டுப்பாட்டை மாற்றவும் தயார் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், இந்த அறிவிப்பு யாரையும் கவரவில்லை என்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.  அரசிடம் மீதமுள்ள 24 சதவீத பங்குகள் மற்றும் அது தொடர்பான உரிமைகள், அதிகபடியான கடன் சுமை, விமான எரிபொருள் விலை நிலவரம், அன்னியச் செலாவணி பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் உள்பட பல காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதைக் கருத்தில் கொண்டு புதிய உத்திகளை நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

Tags : government ,Air India , Air India, Central Government
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...