போலி செய்தி பரப்புவோரை கண்டறிய கைரேகை பதிவு: வாட்ஸ்அப் நிர்வாகத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: வாட்ஸ் ஆப்பில் போலி செய்திகளை பரப்புவது யார் என்பதை கண்டறிய, கைரேகை பதிவு வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் சமூக மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. போலி தகவல்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனம் தனிநபர்களிடையே தகவல்கள் பகிரப்படுவதை பாதுகாக்கும் விதமாக எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போலி தகவல்களை முதலில் பரப்பியது யார் என்று தெரிவதில்லை.

 இந்நிலையில், எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனை நீக்காமல், போலி செய்தியை பரப்பியது யார் என கண்டறிய புதிய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு தகவலையும் கைரேகை பதிவு மூலம் அங்கீகரிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் எனவும், இவ்வாறு செய்தால் எளிதாக போலி செய்தி பரப்பியவரை அடையாளம் காணலாம்.  வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் படிக்கப்போவதில்லை. ஆனால், சந்தேகம் ஏற்படும்போது தகவல் பரவியதன் துவக்கத்தை கண்டறிய இந்த நடைமுறை எளிதாக இருக்கும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.Tags : news spreaders ,government , Fake, Fingerprint Registration, WhatsApp, Federal Government
× RELATED போலீசாருக்கு விரல் ரேகை பதிவு