×

புதுவை அமைச்சரவை முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை நீட்டிப்பு

புதுடெல்லி: புதுவை மாநிலத்தில் அதிகார தடை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அமைச்சரவை முடிவுகளை வெளியிட வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில்,”அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற உத்தரவில்,” ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரம் மற்றும் அவருகான மத்திய அரசின் அறிவிப்பு ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்ற உத்தரவில்,”இந்த வழக்கை பொருத்தமட்டில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி புதுவை மாநில அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக்குப்தா மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு தரப்பு வாதத்தில்,”நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவால் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளது. இதில் முக்கியமாக குடும்ப அட்டை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை தொடர்பான திட்டங்கள் உள்ளது என குறிப்பிட்டு வாதிடப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி தரப்பு வாதத்தில்,”புதுவை மாநிலத்தை பொருத்தமட்டில் சிகப்பு கலர் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் கடை மூலம் அரிசி கொடுக்க வேண்டும். மஞ்சள் கலர் போன்ற மற்ற குடும்ப அட்டைக்கு கொடுக்க கூடாது. மேலும் ஆளுநரின் உத்தரவு இல்லாமல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட திட்டங்களையும் அமல்படுத்த கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில்,”இதில் மேற்கண்ட வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் தற்போது வழங்க முடியாது. இருப்பினும் வழக்கு வரும் ஜூலை 10ம் தேதிகு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இந்த காலக்கட்டம் வரை முந்தைய தடை உத்தரவு நீடிக்கும் என நேற்று உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court , Pondicherry cabinet, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...