தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து குழந்தைகள் உட்பட 24 பேர் கருகி பலி: இந்தோனேஷியாவில் பயங்கரம்

ஜகர்தா: இந்தோனேஷியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அங்கு புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால், அங்கு தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் உட்பட அனைவரும் தீயில் சிக்கினார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளை உடன் அழைத்து வந்திருந்தனர். ெகாளுந்துவிட்டு எரிந்த தீயினால் அவர்களால் தொழிற்சாலையை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண் டுவந்தனர். இந்த தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Terror ,Indonesia , Fireplace factory, fire, children, 24 killed, Indonesia
× RELATED மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீவிபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு