×

ஆசிரியர்களின் டிபன்கேரியர்களை கழுவும் மாணவிகள் வீடியோ வைரல்

கும்பகோணம்:  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சியில் உதவிபெறும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். தையல்நாயகி என்ற தலைமையாசிரியரும்,தர் என்ற ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த 18ம் தேதி மதியம் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஆகியோர் மதிய சாப்பாடு கொண்டு வந்த டிபன் கேரியர்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை 2 மாணவிகள் கழுவினர். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


Tags : Teenagers video washing videos , Teachers, Debunkarians, Students, Video Viral
× RELATED புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது