×

கோவையில் பிடிபட்டவர்களுடன் தொடர்பு குமரி வாலிபரிடம் என்.ஐ.ஏ. விசாரணை: பேக்கரியில் இருந்து அழைத்துச் சென்றனர்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பேக்கரியில் பணியாற்றிய வாலிபரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பெற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன், சதாம்உசேன், அக்ரம் ஜிந்தா, அபுபக்கர், இதயத்துல்லா, இப்ராஹீம் ஆகியோரது வீடுகள், அலுவலங்களில் சோதனை நடத்தினர்.

 இவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இளைஞர்கள் சேர்க்க மூளைச்சலவை செய்து வந்தது தெரியவந்தது. அசாருதீன் தனது முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார். இதனைதொடர்ந்து அசாருதீனை கைது செய்தனர்.  தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழகம் முழுவதும் பலருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.  மேலும் கன்னியாகுமரியை சேர்ந்த இம்ரான்கான் என்பவரும் பிடிப்பட்டவர்களின் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.  அவர்களுக்குள் உரையாடலும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று  கன்னியாகுமரி வந்தனர். பின்னர் இம்ரான்கான் பணியாற்றி வந்த பேக்கரியில் இருந்து அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.



Tags : NIA ,Kumari ,Kovil Investigation ,bakery , Coimbatore, Kumari Youth, NIA
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை