×

பாலியல் குற்றங்களை தடுக்க குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் மரண தண்டனை வழங்க வேண்டும் : சவுமியா அன்புமணி பேச்சு

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்து, ஒரு மாதத்திற்குள் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்க வேண்டும் என்று பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கூறினார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பாமக இளம்பெண்கள் சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:

பெண்களுக்கு பெண்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 14 வயதில் வருவதையெல்லாம் காதல் என்று கூற முடியாது. அது பாலியல் வன்கொடுமை என்றும், சீண்டல் என்றுதான் கூற வேண்டும். 21 வயதில் வருவதைத்தான் காதல் என்றே கருத முடியும். அதேபோல, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க  சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பாலியல் சம்பந்தமான குற்றங்களை ஒரே மாதத்திற்குள் விசாரணை செய்து  குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Offenders ,death , Offenders , sentenced to death ,month
× RELATED பின்தங்கிய முஸ்லிம் பெண்களின்...