×

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 9வது கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரில் ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீர் முழுமையாக கிடைக்கப்பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  


இச்சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகின்ற 25ம் தேதி நடைபெற உள்ளது. எனவே காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் நியாயமான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழகத்துக்கான ஜூன் மாதத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு இப்போதே வலியுறுத்த வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : government ,Karnataka ,Cauvery ,GK Vasan , Karnataka,downgrading, Cauvery water
× RELATED கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம்...